×

டோனி பட நடிகையின் டாப்லெஸ் பரபரப்பு

கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை படத்தில் நடித்தவர் கியாரா அத்வானி. அடுத்து மெஷின், லஸ்ட் ஸ்டோரிஸ் போன்ற இந்தி படங்களில் நடித்ததுடன் தமிழ், தெலுங்கில் உருவான பரத் எனும் நான் படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்திருந் தார். முன்னணி ஹீரோயின்கள் ஒருபக்கம் திரைப்படத்தில் நடித்தாலும் வெப் சீரிஸிலும் நடித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் கியாராவும் வெப் சீரிஸில் நடிக்கிறார். கில்டி என்ற வெப் சீரிஸுக்காக கியாரா நடத்திய போட்டோ ஷூட் சர்ச்சையாகி இருக்கிறது. டாப் லெஸ் தோற்றத்தில் நிற்கும் அவர் தோட்டத்திலிருக்கும் ஒரு செடியின் இலையை கொண்டு தனது அங்கத்தை இலைமறை காய்போல் மறைத்தும் காட்டியும் போஸ் தந்திருக்கிறார்.

இப்படத்தை பிரபல புகைப்பட நிபுணர் ஒருவர் எடுத்திருக்கிறார். அவர் கூறும்போது, ‘இது கலையின் ஒரு பகுதி. இப்படத்தில் ஆபாசம் கிடையாது’ என குறிப்பிட்டிருக்கி றார். ஆனால் ஒரு சிலர், ‘இதுவொரு ஆபாச படம்தான். இந்திய கலாச்சாரத்தையும், மதிப்பையும் குலைக்கும் வகையில் கியாரா போஸ் அளித்திருக்கிறார்’ என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tags : Tony ,movie actress ,
× RELATED கடன் கொடுத்தவர்கள் தாக்கியதால் விரக்தி டோனியின் தீவிர ரசிகர் தற்கொலை