×

சிவகார்த்திகேயனுடன் சண்டைபோடும் நடிகை

சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தை ரவிகுமார் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே இன்று நேற்று நாளை என்ற படத்தை இயக்கியவர். இதில் வில்லி வேடத்தில் நடிக்க சண்டை பயிற்சி தெரிந்த நடிகையை தேடிக்கொண்டிருந்தனர். நடிகை இஷா கோபிகர் ஒரு சில தமிழ் படங்களில் நடித்துவிட்டு இந்தியில் நடிக்கச் சென்றார். அவரை தேடிப்பிடித்து அழைத்து வந்திருக்கிறது அயலான் பட குழு.  இஷா கோபிகர் அப்படியென்ன சண்டை பயிற்சி பெற்றிருக்கிறார் என்றதுதான் தாமதம்,’ 18 வயதிலிருந்தே நான் மார்ஷல் கலை கற்றுவருகிறேன். கொரியன் சண்டைகலையான டேக்வோன்டோ மற்றும் ஹாப்கிடோ பயிற்சிகள் பெற்றிருக்கிறேன். வேண்டுமானால் ஒரு சேம்பல் காட்டுமா என்றபடி ஹா ஹு என பயிற்சியை தொடங்கினார்.

Tags : Actress fighting ,Sivakarthikeyan ,
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கை..: நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் நிதியுதவி