×

வெப் சீரிஸில் இன்னொரு ஹீரோயின்

காஜல் அகர்வால், ரம்யா கிருஷ்ணன், சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் என வரிசையாக பல நடிகைகள் வெப் சீரிஸில் நடிக்கத் தொடங்கியிருக்கின்றனர். சினிமா படப்பிடிப்புக்கும், வெப் சீரிஸில் நடிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை என இவர்கள் கூறுகின்றனர். அதேபோல் இயக்குனர்கள் கவுதம் மேனன், விக்னேஷ் சிவன், சிம்புதேவன் போன்ற இயக்குனர்கள் வெப் சீரிஸ் இயக்குகின்றனர்.

அதேபோல் இயக்குனர் பாரதிராஜா தனது வாழ்க்கை லட்சியமாக கொண்டிருக்கும் குற்றப் பரம்பரையை வெப் சீரிஸாக இயக்க உள்ளாராம். அந்த வரிசையில் தற்போது யுவன் யுவதி, கோ படங்களில் நடித்த ரீமா கல்லிங்கல் வெப்சீரிஸில் நடிக்க உள்ளார். இவர் நடிக்கும் தொடர் இந்தியில் உருவாகிறது. ஜிந்தகி இன் ஷார்ட் என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.

Tags :
× RELATED நிச்சயதார்த்தம் நடந்தது நிஜம்தான்