×

சிவாஜி, கமலை மிஞ்சிய விக்ரம்!....மிரட்ட வரும் கோப்ரா

தமிழ் சினிமாவில் எந்தவிதமான கதாபாத்திரங்களிலும் பொருந்தி நடிக்க கூடியவர்கள் சிவாஜி கணேசன் மற்றும் கமல்ஹாசன். இவர்களின் நடிப்புக்கு ஈடு இணை இல்லை என ரஜினிகாந்த்தே பெருமையாக பேசியுள்ளார். இவர்கள் இருவரும் ஒரே படத்தில் பல விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளனர். சிவாஜி கணேசனுக்கு நவராத்திரி எனும் படத்தில் ஒன்பது கெட்டப்புகள் கிடைத்ததை போல கமல்ஹாசனுக்கு தசாவதாரம் படத்தில் பத்து கெட்டப்புகள் கிடைத்தன.

இந்நிலையில் அவர்களை தொடர்ந்து நடிகர் சியான் விக்ரம் சமீபத்தில் நடித்துக்கொண்டிருக்கும் கோப்ரா படத்தில் சுமார் 12 வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி நடித்து வரும் விக்ரமின் கேரியரில் மிகப்பெரிய உச்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோப்ரா படத்தை இமைக்காத நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தை லலித் குமார் தயாரித்து வருகிறார்.

Tags : Kamal ,Vikram ,
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...