×

இந்தியாவை உலுக்கிய ஐதராபாத் வன்கொடுமையை திரைப்படமாக்கிறார் ராம் கோபால் வர்மா

இரு மாதங்களுக்கு முன் ஐதராபாத்தில் பெண் டாக்டர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். பார்லிமெண்ட் வரையிலும் ஒலித்த இந்தச் சம்பவத்தில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற  குற்றவாளிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இந்தப் பரபரப்பு சம்பவத்தை திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளதாக ராம் கோபால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராம் கோபால் வர்மா கூறுகையில், ஐதராபாத் பாலியல் கொலை சம்பவம்,  நிர்பயா பாலியல் வன்கொடுமைக்குப் பின் நடந்த மிகக் கொடூரமான ஒரு கொலையாகும். நான் இயக்கவிருக்கும் இப்படத்தில் பாலியல் வன்கொடுமையாளர்கள் குறித்தும், அந்த கொலையாளிகள், அந்த பெண்ணை கொல்வதற்கான காரணம் குறித்தும் விளக்கி உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

Tags : Ram Gopal Verma ,Hyderabadi India ,
× RELATED படைப்பாளிகளுக்கு முழு சுதந்திரம்: ராம் கோபால் வர்மா