×

சத்யராஜ் பட டைட்டிலில் நடிக்கும் சிபி

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் நடித்த படங்களின் தலைப்பை சில இயக்குனர்கள் தங்கள் படங்களுக்கு வைக்கின்றனர். தந்தை சத்யராஜ் நடித்த வால்டர் வெற்றிவேல் என்ற டைட்டிலை ‘வால்டர்’ என்று சுருக்கி தனது படத்துக்கு வைத்து போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் சிபிராஜ்.

யு.அன்பு இயக்குகிறார். ஸ்ருதி திலக் தயாரிக்கிறார். பிரபுதிலக் இணை தயாரிப்பு செய்கிறார். தர்மா பிரகாஷ் இசை. ஒளிப்பதிவு - ராசாமதி. ஷ்ரின் ஹீரோயின்கள் கான்ஞ்வாலா ரித்விகா, சனம் ஷெட்டி, முக்கிய வேடத்தில் நட்டி, சார்லி நடிக்கின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

படம்பற்றி சிபிராஜ் பேசும்போது,’என் அப்பா சத்யராஜ் வாழ்வில் மிகப் பெரிய வெற்றிபடம் வால்டர் வெற்றிவேல். அந்த பெயரை என் படத்துக்கு வைத்தால் நிறைய ஒப்பீடுகள் வரும் என தெரியும் ஆனால் அதை ஈடு கட்டும் விதத்தில் கதை இருப்பதால் வால்டர் டைட்டிலை படத்திற்கு வைத்தோம். வால்டர் வெற்றிவேல் பட இயக்குனர் பி.வாசு சார், வால்டர் தேவாரம் இங்கு வந்து வாழ்த்தியது மிகப்பெரும் ஆசீர்வாதம்’ என்றார்.

Tags : CB ,Sathyaraj ,
× RELATED இது வாயில வடை சுடுற கதை இல்ல - Sathyaraj Speech at Weapon Trailer Launch | Dinakaran news.