×

நேபாளத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தல்

காத்மாண்டு: நேபாளத்தில் 275 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றம், 550 உறுப்பினர்களை கொண்ட 7 மாகாண சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகின்றது. 7 மாகாணங்களிலும் 1.79 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. நாடாளுமன்றத்துக்கான 275 உறுப்பினர்களில் 165 பேர் நேரடி வாக்கு மூலமாகவும், மீதமுள்ள 110 பேர் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். இதேபோல் மொத்தமுள்ள 550 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 330 பேர் நேரடியாகவும் 220 பேர் விகிதாசார முறையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். ஆளும் நேபாள காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தொங்கு நாடாளுமன்றம் அமையலாம் என்றும், போதுமான அரசியல் ஸ்திரதன்மையை வழங்க வாய்ப்பில்லாத அரசு அமையும்  என்றும் கணிக்கப்பட்டுள்ளது.  மலேசியாவில் வாக்குப்பதிவு: மலேசியாவில் 222 நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கான பொதுத்தேர்தல் நேற்று நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். …

The post நேபாளத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தல் appeared first on Dinakaran.

Tags : elections ,Nepal ,Kathmandu ,Legislature ,Parliamentary Elections ,Dinakaran ,
× RELATED 4வது முறையாக நம்பிக்கை ஓட்டு கோரும் நேபாள பிரதமர்