×

காமெடி வில்லனாக கே.எஸ்.ரவிகுமார்

ஹிப்ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ள படம், நான் சிரித்தால். சுந்தர்.சி தயாரித்துள்ளார். முதல்முறையாக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் காமெடி வில்லனாக நடித்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் ராணா கூறுகையில், ‘வழக்கமான வில்லனாக இல்லாமல், அனைவரையும் சிரிக்க வைக்கும் வில்லன் வேடம் ஏற்று நடித்துள்ளார்.

அவரும், ஆதியும் சந்திக்கும் காட்சிகளில் காமெடி கலந்த திரில் இருக்கும். ஏராளமான காட்சிகளில் ஆதி சிரித்துக்கொண்டே இருப்பார். அதை பார்க்கும் ரசிகர்களுக்கு சிரிப்பும், கூடவே பயமும், பரிதாபமும் ஏற்படும். வரும் 14ம் தேதி படம் ரிலீசாகிறது’ என்றார்.

Tags : KS Ravikumar ,comedy villain ,
× RELATED அரிமாபட்டி சக்திவேல் பர்ஸ்ட் லுக் வெளியீடு