×

சுதீப்புக்கு கார் பரிசளித்த சல்மான் கான்

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்த இந்தி படம் தபங் 3. இந்த படத்தில் வில்லனாக ‘நான் ஈ’ சுதீப் நடித்தார். இந்த படத்துக்காக அவருக்கு ஒரு தொகை சம்பளமாக தரப்பட்டது. படப்பிடிப்பின்போது சல்மானுக்கும் சுதீப்புக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது.

இந்நிலையில் திடீரென பெங்களூருக்கு வந்த சல்மான் கான், சுதீப்பை அவரது வீட்டில் சந்தித்தார். அப்போது அவருக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்து வாழ்த்தினார். இதை சற்றும் எதிர்பார்க்காத சுதீப், சல்மானுக்கு நன்றி தெரிவித்தார்.

Tags : Salman Khan ,Sudeep ,
× RELATED நடிகர் சல்மான்கானை கொல்ல சதி ரவுடி...