×

சல்மான் - கங்கனா சண்டை முடிந்தது

சல்மான் கான், கங்கனா ரனவத் இடையே நிலவி வந்த மோதல் போக்கு, முடிவுக்கு வந்துள்ளது. பிக்பாஸ் இந்தி பதிப்பில் சல்மான் கானும் கங்கனாவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். ஹிரித்திக் ரோஷனுடன் காதல் தோல்விக்கு பிறகு அவரை கடுமையாக சாடி வந்தார் கங்கனா ரனவத். ஹிரித்திக்கிற்கு ஆதரவாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹீரோக்களான ஷாருக்கான், ஆமிர்கான், சல்மான் கான் ஆகியோரும் சில கருத்துகளை தெரிவித்தனர். இதில் கங்கனாவுக்கு கோபம் அதிகமானது. மூன்று கான் நடிகர்களையும் அவர் நேரடியாகவே சாடினார்.

மேலும் தனது படங்கள், கான் நடிகர்களுக்குதான் போட்டி என தில்லாக கூறினார். இது பற்றி ஒருமுறை சல்மான் கானிடம் கேட்டபோது, கங்கனாவுக்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய அவசியம் தனக்கில்லை என கோபமாக சொன்னார். எந்த நிலையிலும் மூன்று கான் நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என அப்போதே சபதமிட்டார் கங்கனா. இந்நிலையில் கங்கனா மீதான சல்மானின் கோபம் தணிந்துள்ளது. கங்கனா நடிப்பில் பங்கா என்ற படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இதில் கபடி வீராங்கனையாக கங்கனா நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியை பிக் பாஸில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு சல்மான் கான் சம்மதம் தெரிவித்தார். இதையறிந்து கங்கனாவும் மகிழ்ச்சி தெரிவித்ததுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பழைய விஷயங்களை மறந்து, சல்மானும் கங்கனாவும் சந்தோஷமாக உரையாடி மகிழ்ந்தனர். பின்னர் கங்கனாவுடன் சேர்ந்து சல்மான் கபடி ஆடி பார்வையாளர்களை பிரமிக்க வைத்தார்.

Tags : fight ,Salman - Kangana ,
× RELATED எலக்சன் பர்ஸ்ட் லுக் வெளியானது