×

கீர்த்தியின் அம்மாவுக்கு சமர்ப்பணம்

நடிகை கீர்த்தி சுரேஷ் தேசிய விருது வென்ற மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார். தான் பெற்ற தேசிய விருதை தனது தாய்க்கு சமர்ப்பிப்பதாக கூறியிருக்கிறார். கீர்த்தியின் தாயார் மேனகாவும் பிரபல நடிகை என்பது பலருக்கு தெரிந்த விஷயம் தான். ரஜினிகாந்த் நடித்த நெற்றிக்கண் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் மேனகா. தற்போது அவரது மகள் கீர்த்தி சுரேஷ், ரஜினி நடிக்கும் 168 படத்தில் நடித்து வருகிறார்.

தேசிய விருது பெற்றது குறித்து கீர்த்தி கூறும்போது,’சாவித்ரி வாழ்க்கை படத்தில் நடிக்கலாமா, வேண்டாமா? என்று நான் யோசனையாக இருந்த போது என்னை நடிக்க சொன்னவர் எனது மாமாதான். அவர்தான் இப்படத்தில் நடிப்பதற்கு எனக்கு உந்து சக்தியாக இருந்தார். சாவித்ரியம்மாவின் ஆசியால் எனக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது. நான் பெற்ற தேசிய விருதை எனது அம்மாவுக்கு சமர்ப்பிக்கிறேன்.

Tags : Keerthi ,
× RELATED அனிமேஷன் வீடியோவுக்கு டப்பிங் பேசிய பிரபாஸ்