×

இருமொழிகளில் வெளியாகும் ‘பெண்கோட்’

ஆணும், பெண்ணும் ஒன்றல்ல. இருவரும் வெவ்வேறானவர்கள்; தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்று, தத்துவமேதை ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்லியிருக்கிறார். பெண்களுக்கு இருக்கும் சில பிரத்தியேக எண்ணங்களை, அவர்களுடைய உலகத்துக்கு சென்று பார்த்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்ற கருத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ள கிரைம் திரில்லர் படம், ‘பெண்கோட்’. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படம், ஜேஎன்கேஎல் கிரியேஷன்ஸ் சார்பில் தமிழகம் மற்றும் கேரளாவில் வரும் நவம்பர் மாதம் வெளியிடப்படுகிறது.

அருண் ராஜ் பூத்தணல் எழுதி இயக்கியுள்ளார். ஆஸ்திரியா மூவி புரொடக்‌ஷன்ஸ், ஜேஎன்கேஎல் கிரியேஷன்ஸ் சார்பில் பிரவிதா ஆர்.பிரசன்னா, ஜெய் நித்ய காசி லட்சுமி தயாரித்துள்ளனர். அருண் சாக்கோ, சரீஷ் தேவ், லட்சுமி சாந்தா, சோனா, திரவிய பாண்டியன், கார்த்திகா ஸ்ரீராஜ், உன்னி காவ்யா, எபின் வின்சென்ட், ஷம்ஹூன், ஜார்ஜ் தெங்கனாந்தரத்தில், ஜோஸ் நடத்தி பறம்பில், பேபி அதிதி, சந்தீப் நடித்துள்ளனர். அருண் ராஜா ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் பாண்டியன் இசை அமைத்துள்ளார். வயநாடு, ஊட்டி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்தின் டைட்டில் லுக்கை ‘ஜித்தன்’ ரமேஷ் வெளியிட்டார்.

Tags : Philosopher ,J. Krishnamurthy ,Tamil Nadu ,Kerala ,JNKL Creations ,Arun Raj Bhoothanal ,Austria Movie Productions ,JNKL ,
× RELATED சண்டை போட தயாராகும் சமந்தா