×

நடிகருடன் காதலா; பிரியா வாரியர் விளக்கம்

ஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தின் டீசரில் இடம்பெற்ற கண் சிமிட்டல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர், பிரியா பிரகாஷ் வாரியர். அவர் கூறியதாவது; சமூக வலைத்தளங்களில் பரவிய என் வீடியோ மூலமாக, ஓவர்நைட்டில் உலகம் முழுவதும் நான் பிரபலமானதை இன்று வரை என்னால் நம்ப முடியவில்லை. அதேவேளையில், என்னைப் பற்றி நெகட்டிவ் விமர்சனங்களும் வந்தது. மீம்ஸ்கள் மூலமாக என்னை வெறுப்பேற்ற ஆரம்பித்து விட்டார்கள்.

முதலில் அதுபற்றி நினைத்து வருத்தப்பட்டேன். இப்போது என்னைப் பற்றி வெளியாகும் நெகட்டிவ் செய்திகள் மற்றும் மீம்ஸ்களை நான் படிப்பதில்லை. நான் யாரோ ஒரு நடிகரின் காதல் வலையில் சிக்கியதாக தகவல்கள் வருகிறது. அது உண்மை கிடையாது. நான் 9ம் வகுப்பு படித்தபோது, ஒரு மாணவனை காதலித்தேன். நாளடைவில் அது ஒரு இனக்கவர்ச்சி என்று புரிந்துகொண்டு, இருவரும் பரஸ்பரம் பேசி  பிரிந்துவிட்டோம்.

Tags : actor ,
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்...