×

சென்சாரில் சிக்கிய பிழை

ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் காக்கா முட்டை ரமேஷ், அப்பா நஷாத், மைம் கோபி, சார்லி, கோகுல் நடித்துள்ள படம், பிழை. மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உள்ள பிணைப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஆர்.தாமோதரன் கூறியதாவது: சில காட்சிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை காமெடியாக கழுதையே, நாயே என்று விலங்குகள் பெயர் சொல்லி அழைப்பார்கள்.

ஆனால், மாணவர்களை விலங்குகள் பெயர் சொல்லி அழைக்கக்கூடாது என்று கண்டனம் தெரிவித்த சென்சார் குழுவினர், அந்த வசனங்களை ‘மியூட்’ பண்ண சொன்னார்கள். அதன்படி செய்தோம். பிறகு யு’ சர்ட்டிபிகேட் கொடுத்தனர். வரும் ஜனவரி 3ம் தேதி படம் ரிலீசாகிறது.

Tags :
× RELATED சினிமா நடிகர்களை கொண்டாடாதீர்கள்: பஹத் பாசில் அதிரடி