×

பாலசந்தர் பெயரில் நூலகம்

இயக்குனர் கே.பாலசந்தரின் 5வது நினைவு நாளில் கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் பங்கேற்று பேசிய சிவகுமார், ’பாலசந்தர் வாழ்க்கையில் மறக்க முடியாத 3 பேர் நாகேஷ், ரஜினி மற்றும் கமல். சொல்லத்தான் நினைக்கிறேன், அக்னிசாட்சி, சிந்துபைரவி மூலம் எனக்கு கைதட்டலை வாங்கித் தந்தவர்’ என்றார். நாசர் கூறும்போது,’கே.பாலசந்தரின் கல்யாண அகதிகள் மூலம்தான் நான் அறிமுகமானேன்.

பாலசந்தரின் பழக்க வழக்கங்கள், படமெடுக்கும் பாணியை சினிமாவில் நடைமுறைப்படுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. பாலசந்தர் என்றவுடன் அறிவு சார்ந்த சினிமாதான் ஞபாகம் வரும். அவர் பெயரில் ஒரு நூலகம் அமைய வேண்டும்’ என்றார். பாலசந்தருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று ரசிகர் சங்க நிர்வாகிகள் பாபு, பழனி அரசுக்கு கடிதம் கொடுத்துள்ளனர். அடுத்த ஆண்டு சிலை நிறுவப்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Tags : Balachander ,
× RELATED தகாத உறவுக்கு இடையூறு 4 வயது சிறுவன்...