திருமணம் எப்போது? காஜல், தமன்னா பதில்

காஜல் அகர்வால், அனுஷ்கா, நயன்தாரா, தமன்னா 30 வயதை கடந்த நிலையில் அவர்களிடம் அடிக்கடி திருமணம் பற்றி கேள்வி கேட்கப்படுகிறது. அனுஷ்கா நடிகர் பிரபாஸுடன் இணைந்து கிசுகிசுக்கப்படுகிறார். அதேபோல் டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் பகிரங்கமாக ஜோடிபோட்டு சுற்றி வருகிறார் நயன்தாரா. ஆனால் காஜல் அகர்வால், தமன்னா இருவரும் தங்களின் திருமணம், காதல் விவகாரம் பற்றி வெளிப்படையாக பேசாமல் நழுவுகின்றனர்.

தமன்னா

தமன்னா வீட்டில் அவரை திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்துவதாக தகவல் வருகிறது. இதுபற்றி அவரிடம் கேட்டால், எனக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை, யாராவது இருந்தால் சொல்லுங்கள்’ என்று கேள்வி கேட்பவரிடமே மாப்பிள்ளை பார்க்கச் சொல்லி கலாட்டா செய்கிறார். அதேசமயம் தனக்கு திருமணம் பேசி முடிவானால் அதுபற்றி பகிரங்கமாக தெரிவிப்பேன் என்கிறார்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வாலை பொறுத்தவரை தொழில் அதிபருடன் காதல் என்று தகவல்கள் வருவதுபற்றி கேட்டால், ‘சீக்கிரம் திருமணம் செய்துகொள்வேன்’ என்கிறார். மீண்டும் திருமணம்பற்றி யாராவது கேட்டால், ‘திருமணம் எனது தனிப்பட்ட விஷயம், அதுபற்றி தெரிந்துகொள்ள மக்கள் அவ்வளவு ஆர்வம் காட்ட வேண்டியதில்லை’ என்கிறார்.

Related Stories:

>