×

அரசு கட்டிடங்களின் தரம் ஆய்வு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் ஏற்கெனவே உள்ள அரசு கட்டிடங்கள் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களின் தரம் குறித்து நேற்று கூடுதல் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இதனால் அப்பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் கலக்கமடைந்தனர். கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட 61 ஊராட்சிகளில் சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அந்தந்த ஊராட்சிக்கு உட்பட்ட சாலை வசதி, அரசு தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி கட்டிடம், அரசு தொகுப்பு வீடுகள், புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவறை உள்பட பல்வேறு அரசு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் சரியாக செய்து வருகிறார்களா, புதிதாக கட்டப்படும் அரசு கட்டிடங்கள் தரமானதாக உள்ளதா, அரசு பள்ளிக் கட்டிடங்கள் வலுவாக உள்ளனவா என நேற்று திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் ரிஷப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், செல்வகுமார், பொறியாளர்கள் ஆகியோருடன் நாகராஜ்கண்டிகையில் பழுதடைந்த அரசு தொடக்கப் பள்ளியை கூடுதல் கலெக்டர் ரிஷப் பார்வையிட்டார். பெரிய ஓபுளாபுரம் பகுதியிலுள்ள அரசு பள்ளியின் மேல்தளத்தில் பழுது நீக்கவும், புதிதாக சுற்றுச்சுவர் அமைத்தல், மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதற்கு, அப்பள்ளியில் மிக விரைவில் சுற்றுச்சுவர் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் அதேபோல் அரசு பள்ளி கட்டிடத்துக்கு புதிதாக போடப்பட்ட சாலை தரமானதாக உள்ளதா என்பதை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் அரசு பள்ளி, தொகுப்பு வீடு, கழிவறை, சாலை பணிகளை நேரடியாக டேப்பை கொண்டு கூடுதல் கலெக்டர் ரிஷப் அளவீடு செய்தார். இதைத் தொடர்ந்து குருவாட்டுச்சேரி, கீழ்முதலம்பேடு பகுதிகளில் உள்ள அரசு கட்டிடங்களையும் கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார். கூடுதல் கலெக்டரின் ஆய்வில் அரசு கட்டிடப் பணிகளில் பல்வேறு குறைகளை சுட்டி காட்டி, அவற்றை உடனடியாக சரிசெய்வதற்கு உத்தரவிட்டதால், அப்பகுதி அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோரிடையே கலக்கம் ஏற்பட்டது. இந்த ஆய்வில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பெரிய ஓபுளாபுரம் செவ்வந்தி மனோஜ், புதுகும்மிடிப்பூண்டி அஸ்வினி சுகுமாறன், கீழ்முதலம்பேடு கே.ஜி.நமச்சிவாயம், குருவாட்டுச்சேரி கோமதி சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். …

The post அரசு கட்டிடங்களின் தரம் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kummipundi ,Kummipundi Union ,Dinakaran ,
× RELATED இணைந்திருக்கும் தெய்வீக இசை