×

பாகிஸ்தான் பிரதமருக்கு 3வது முறை கொரோனா

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு மூன்றாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எகிப்தில் நடந்த பருவநிலை மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்து கொண்டார். இந்த மாநாட்டிற்கு பிறகு  தனது சகோதரர் நவாஸ் ஷெரீப்பை சந்திப்பதற்காக லண்டன் சென்றார். பின்னர், நேற்று முன்தினம் அவர் பாகிஸ்தான் திரும்பினார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அமைச்சர் மரியம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பிரதமர் கடந்த 2 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக செவ்வாயன்று அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பிரதமர் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,’ என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு ஜூன், இந்தாண்டு ஜனவரியில் ஏற்கனவே 2 முறை கொரோனாவால் ஷெபாஸ் பாதிக்கப்பட்டு, குணமடைந்தார். …

The post பாகிஸ்தான் பிரதமருக்கு 3வது முறை கொரோனா appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Islamabad ,Shahbaz Sharif ,Egypt ,
× RELATED கலவர வழக்கில் இம்ரான்கான் விடுதலை