×

வானிலையில் சாதகமான சூழல்: இன்று விண்ணில் ஏவப்படுகிறது ஆர்ட்டெமிஸ் – 1 ராக்கெட்..!!

வாஷிங்டன்: நிலவில் ஆராய்வதற்காக ஆர்ட்டெமிஸ் – 1 ராக்கெட்டை இன்று காலையில் ஏவுவதற்கான 3வது முயற்சியில் நாசா ஈடுபட்டு வருகிறது. 53 ஆண்டுகள் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பி நீண்ட காலம் தங்க வைத்து ஆய்வு செய்வதற்காக ஆர்ட்டெமிஸ் என்ற பயண திட்டத்தை நாசா கையில் எடுத்துள்ளது. இந்த திட்டம் மூலம் 2025ம் ஆண்டு நிலவுக்கு மனிதனை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இருமுறை ஆர்ட்டெமிஸ் – 1 ராக்கெட்டை ஏவும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், இன்று காலை 11:34 மணியளவில் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டை நிலவுக்கு ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. வானிலையில் சாதகமான சூழல் இருப்பதால் ராக்கெட்டை ஏவுவதற்கு 90 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒருவேளை ராக்கெட் ஏவுதளத்தில் சிக்கல் ஏற்பட்டால் நவம்பர் 19 அல்லது 25ம் தேதி ராக்கெட்டை ஏவ மாற்று தேதிகளாக நாசா முடிவு செய்துள்ளது….

The post வானிலையில் சாதகமான சூழல்: இன்று விண்ணில் ஏவப்படுகிறது ஆர்ட்டெமிஸ் – 1 ராக்கெட்..!! appeared first on Dinakaran.

Tags : Washington ,NASA ,Dinakaran ,
× RELATED அதிபர் தேர்தலில் பின்னடைவா?.. டொனால்ட்...