×

விருது கிடைக்காததால் விழாவை புறக்கணித்த ஷாஹித் கபூர்

ஷாஹித் கபூர் நடிப்பில் வெளியான படம் கபீர் சிங். இதில் சிறப்பாக நடித்த ஷாஹித் கபூருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பலரும் அவரது நடிப்பை பாராட்டியிருந்தனர். இந்நிலையில் ஸ்கிரின் திரைப்பட விருது விழா சமீபத்தில் நடந்தது. இதில் சிறந்த நடிகருக்கான போட்டி களத்தில் ஷாஹித் கபூரும் இடம்பெற்றிருந்தார்.

விருது தனக்கே கிடைக்கும் என்ற ஆவலில் அவர் விழாவில் பங்கேற்றார். ஆனால், சிறந்த நடிகருக்கான விருது ரன்வீர் சிங்கிற்கு வழங்கப்பட்டது. கல்லி பாய் படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருதை வழங்கினர். இதை பார்த்து கோபம் அடைந்த ஷாஹித் கபூர், உடனே விழா அரங்கை விட்டு வெளியேறினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Tags : Shahid Kapoor ,ceremony ,
× RELATED பெரியகருப்பூர் சாமுண்டீஸ்வரி கோயில் காப்பு கட்டு விழா