விஜய்க்கு ஆசிரியர் எழுதிய கடிதம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படப்பிடிப்பில் நடித்து வருகிறார் விஜய். சென்னை, டெல்லியில் இரண்டுகட்டமாக நடந்து முடிந்த படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் நடந்து வருகிறது. சென்னையில் படப்பிடிப்பு நடந்தபோது பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் ஷூட்டிங் நடந்தது. அங்குள்ள மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்கள் விஜய்யுடன் ஒரு சில நிமிடம் பேச வேண்டும் என்று காத்திருந்தார்களாம்.

ஆனால் அதுபற்றி அவரிடம் யாரும் சொல்லவில்லை. படப்பிடிப்பு முடிந்து விஜய்யும் புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த சம்பவத்தை ஆசிரியர் ஒரு கடிதம் மூலம் வெளியிட்டிருந்தார். தற்போது அது விஜய்யின் கவனத்துச் சென்றிருக்கிறது. உடனே விஜய் நடந்த சம்பவத்துக்கு வருத்தப்பட்டார். கர்நாடகாவில் படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்ததும் குறிப்பிட்ட பள்ளிக்கு வந்து மாணவர்களை சந்திக்க முடிவு செய்திருக்கிறாராம்.

Related Stories:

>