×

இதுக்குகூடவா பீர் குடிப்பாங்க; பாடகி அலம்பல்

பாலாவின் பரதேசி படத்தில் ஓர் மிருகம் பாடல் பாடியதுடன் வணக்கம் சென்னையில் ஒசாக ஒசாக பாடல் பாடியிருப்பவர் பிரகதி. திரையுலகில் வளர்ந்து வரும் பாடகியான இவருக்கு நடிக்கும் ஆசையும் வந்துவிட்டதுபோல. இணைய தள பக்கத்தில் நடிகைகள் ஆர்வம் காட்டுவதுபோல் பிரகதியும் ஆர்வம் காட்டி வருவதுடன் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்க்க முயற்சிக்கிறார்.

ஆனாலும் ஃபாலோயர்கள் எதிர்பார்த்தளவுக்கு எகிறவில்லை. இப்படியெல்லாம் செய்தால் சரியா வராது ஏதாவது ஏடாகூடமாக செய்தால்தான் ஃபாலோயர்கள் வருவார்கள் என்று யாரோ சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. வில்லங்கமான விஷயத்தை செய்திருக்கிறார். மல்டி ஸ்டோர் ஒன்றுக்கு சென்ற பிரகதி பீர் பாட்டில் வாங்கி அதை கிளாஸில் ஊற்றினார்.

யாருக்கோ தரப்போகிறார் என்று பார்த்தால் திடீரென்று அவரே ஒரு சிப் குடிப்பதுபோல் புகைப்படத்துக்கு போஸ் தந்தார். பிறகு அந்த படத்தை இணைய தள பக்கத்தில் வெளியிட்டு, ‘சும்மா போட்டோவுக்கு போஸ் கொடுக்க ஒரு சிப் அடித்தேன்’ என்று ஜோவியலாக மெசேஜ் பகிர்ந்திருக்கிறார். அவரது இந்த செயலை பார்த்து நெட்டிஸன்கள், ‘இதுக்குகூடவா பீர் குடிப்பாங்க’ என்று திட்டி தீர்க்கின்றனர்.

Tags : Singer Allambal ,
× RELATED பாலா இயக்கிய வணங்கான் அடுத்த மாதம் வெளியாகிறது