×

எதிர்பார்த்த வேடம் கிடைக்கவில்லை : லாவண்யா கவலை

தமிழில் பிரம்மன் படத்தில் நடித்த லாவண்யா திரிபாதி நீண்ட இடை வெளிக்கு பிறகு மாயவன் படத்தில் நடித்தார். தெலுங்கிலும் வரும் வாய்ப்பு களை ஏற்று நடித்து வருகிறார். ஆனால் அவரது படங்கள் எதுவும் ஆஹா ஓஹோ என்று ஓடி பெயரை சம்பாதித்துக் கொடுக்கவில்லையாம். தேடி வந்த படத்தை ஏற்க மறுத்த நிலையில் அப்படம் வேறு ஒரு நடிகையின் நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட்டாகி விடுகிறதாம்.

இதுபற்றி லாவண்யா விடம் கேட்டபோது.’நான் ஏற்க மறுத்து வேண்டாம் என்ற படம் ஹிட்டாகி விட்டால் அதைக் கண்டு வருந்துவதில்லை. என்ன வேண்டும் என்று நான் நினைக்கிறேனோ அதுபோன்ற படங்கள் எனக்கு வருவதில்லை. எது பிடிக் கிறதோ அந்த படத்தில் மட்டும்தான் நடிக்கிறேன்.

வேறு நடிகை முன்னணிக்கு வந்துவிட்டாரே நாமும் அப்படி வரவேண்டும் என்ற எலி ஓட்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான கீதா கோவிந்தம் படத்தில் நடிக்க எனக்குதான் வாய்ப்பு வந்தது. அது எனக்கு பிடித்திருந்தது ஆனால் வேறு சில காரணங்களால் அப்படத்தை என்னால் ஏற்க முடியவில்லை’ என்றார்.

Tags : Lavanya ,
× RELATED லாவண்யா ஜூவல்லரியின் ரூ.34.11 கோடி சொத்து அமலாக்கத்துறை முடக்கம்