×

ஹோண்டா எக்ஸ்எல் 750

ஹோண்டா நிறுவனம், எக்ஸ்எல் 750 டிரான்ஸ்லாப் என்ற அட்வஞ்சர் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக், சிபி500 எக்ஸ் மற்றும் ஆப்ரிகா டிவின் 1100 ஆகியவற்றுக்கு இடைப்பட்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்போர்க் வீல் இடம் பெற்றுள்ளது. முன் சக்கரம் 21 அங்குலமும் பின் சக்கரம் 18 அங்குலமும் கொண்டதாக இருக்கும். இதில் உள்ள 755 சிசி இன்ஜின் பேரலல் டிவின் லிக்விட் கூல்டு இன்ஜின், அதிகபட்சமாக 9,500 ஆர்பிஎம்-ல் 90 பிஎச்பி பவரையும், 7,250 ஆர்பிஎம்-ல் 75 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ரைடிங் மோட்கள் உள்ளன. இந்தியச் சந்தைக்கு அடுத்த ஆண்டு வரும் எனவும், விலை சுமார் ரூ.13 லட்சம் என நிர்ணயிக்கப்படலாம் எனவும், இந்த பைக், டுகாட்டி மல்டிஸ்டிராடா வி2, டிரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் மற்றும் பிஎம்டபிள்யூ 850 ஜிஎஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது….

The post ஹோண்டா எக்ஸ்எல் 750 appeared first on Dinakaran.

Tags : Honda ,
× RELATED ராயபுரம் பகுதியில் உரிய ஆவணமில்லாத 60...