×

இங்கிலாந்தில் வெங்கி ராமகிருஷ்ணனுக்கு உயரிய விருது

லண்டன்: தமிழ்நாட்டின் சிதம்பரத்தில் பிறந்தவர் வெங்கி ராமகிருஷ்ணன். இவர் அமெரிக்காவில் உயிரியல் படித்தார். பின்னர் இங்கிலாந்து சென்றார்.  இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள மூலக்கூறு உயிரியலுக்கான எம்ஆர்சி ஆய்வகத்தின் ஆராய்ச்சி மையக்குழு தலைவராக இருந்தார். கடந்த 2009ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்றார். இந்நிலையில் அறிவியலுக்கான சிறப்பான சேவையை பாராட்டி இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் அவருக்கு ஆர்டர் ஆப் மெரிட் விருதை வழங்கியுள்ளர். செப்டம்பர் மாதம் இரண்டாம் எலிசபெத் ராணி இறப்பதற்கு முன்பாக செய்யப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க 6 நியமனங்களில் வெங்கி ராமகிருஷ்ணனின் விருதும் ஒன்றாகும். மேலும் புதிதாக பொறுப்பேற்ற மன்னர் சார்லசால் முதல் விருது பெறும் நபர் ஆவார்….

The post இங்கிலாந்தில் வெங்கி ராமகிருஷ்ணனுக்கு உயரிய விருது appeared first on Dinakaran.

Tags : Venky Ramakrishnan ,England ,London ,Chidamparam, Tamil Nadu ,United States ,UK ,Cambridge ,
× RELATED மலர்களோடு பூத்துக் குலுங்கும்