×

ஜெய் நடிக்கும் ஒர்க்கர்

சென்னை: பிரிமுக் பிரசன்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜெய், யோகி பாபு, ரீஸ்மா நானையா நடிப்பில் உருவாகும் படம் ‘ஒர்க்கர்’. வினய் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் யோகி பாபு, நாகினீடு, பரத் கல்யாண், பிரவீனா, ஸ்ரீஜா ரவி, சசி லயா, வெங்கட் செங்குட்டுவன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். அஞ்சி ஒளிப்பதிவு செய்து ஜிப்ரான் இசை அமைக்கிறார்.

உண்மையான உணர்வுகள், சுவாரஸ்யமான கதை போன்ற ரசிகர்களை கவரும் தருணங்களால் ‘ஒர்க்கர்’ திரைப்படம் நிறைந்திருக்கும் என்று இயக்குநர் வினய் கிருஷ்ணா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த படத்தை ப்ரிமுக் பிரசன்ட்ஸ் நிறுவனம் சார்பாக எம்.ஷோபனா ராணி தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. முதற்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற வருகிறது.

Tags : Jay ,Primukh Presents ,Jai ,Yogi Babu ,Reisma Nanaya ,Vinay Krishna ,Nagineeti ,Bharat Kalyan ,Praveena ,Srija Ravi ,Sasi Laya ,Venkat Chengutuan ,GIBRON ,
× RELATED சண்டை போட தயாராகும் சமந்தா