×

ராஜமவுலி படத்தில் அலியாபட் ஷூட்டிங் எப்போது... 2வது நாயகி யார்..?

பிரபாஸ் அனுஷ்கா நடித்த பாகுபலி படத்தையடுத்து தற்போது ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இப்படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியாக உள்ளது. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடித்து வருகின்றனர். ராம் சரணுக்கு ஜோடியாக இந்தி நடிகை அலியாபட் நடிக்கிறார். அதேசமயம் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்பதுபற்றி முடிவாகாமலிருக்கிறதாம்.

இதனால் அவரின் காதல் காட்சிகள் ஹீரோயினுக்காக காத்திருக்கிறது. மேலும் இப்படத்தில் நடிப்பதற்காக அலியா பட் உறுதி செய்யப்பட்டு ஒரு மாதம் ஆகியும் அவர் சம்பந்தப்பட்ட ஒரு காட்சிகூட இதுவரை எடுக்கப்படவில்லை. அதேபோல் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கும் அஜய்தேவ்கன் காட்சிகளும் படமாக்க வேண்டி உள்ளது. ஏற்கனவே ராஜமவுலி இயக்கிய பாகுபலி, நான் ஈ போன்ற படங்களுக்கு முதலிலேயே ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதன்படி வெளியாகாமல் பல மாதம் தாமதத்துக்குபிறகே வெளியானது. தற்போது ஆர்ஆர்ஆர் படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில் அதுவும் சொன்ன தேதிக்கு வெளியாகுமா என்று திரையுலகினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர். இந்த சந்தேகங் களுக்கு ராஜமவுலி பதில் தரவேண்டும் என்றும் கேட்டிருக்கின்றனர்.

Tags : Aliabad ,Rajamouli ,
× RELATED ராஜமவுலிக்கு பரிசு கொடுத்த 83 வயது ஜப்பான் பாட்டி