×

ரகுலுக்கு என்ன ஆச்சு... கலாய்க்கும் நெட்டிஸன்கள்..

ரகுல் ப்ரீத் சிங்கிற்கு தற்போது மார்க்கெட் டல்லடிக்கும் நேரமாக இருக்கிறது. தமிழ், தெலுங்கில் அவர் நடித்து  திரைக்கு வந்த 3 படங்கள் பெரிய வெற்றியை பெறாததால் இந்தநிலைக்கு சரிந்திருக்கிறார். இதனால் நடிப்பிலிருந்து சில காலம் ஒதுங்கியிருக்கவும் எண்ணியிருந்தார். ஆனாலும் கமலுடன் இந்தியன் 2ம் பாகத்திலும், சிவகார்த்திகேயன் படத்திலும் நடிக்க வந்த வாய்ப்பை அவரால் தட்ட முடியவில்லை.

தென்னிந்திய படத்தைவிட பாலிவுட்டில் ரகுலுக்கு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தே தே பியர் தே படத்தில் மது குடிப்பது, தம்மடிப்பதுபோன்ற சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்தபோதும் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காத தால் ஏமாற்றம் அடைந்தார். அடுத்து மர்ஜவான் படத்தில் சிறிய வேட மொன்றில் நடிப்பதுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.

ரகுல் நடித்த பாடல் வீடியோ வெளியானது. அதில் கவர்ச்சியான உடை அணிந்திருந்தாலும் நடன அசைவுகளில் ரசிகர்களை ஈர்ப்பதுபோல் எதுவும் இல்லை என்று விமர்சிக்கப்படுகிறது. சில காட்சிகளில் அவரது நடிப்பும் சோபிக்கவில்லை. இதுபோன்ற பாடல்களில் அவர் நடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சிலர் விமர்சித்திருக்கின்றனர். நல்லாத்தானே இருந்தார் ரகுல்... இப்ப என்ன ஆச்சு? என நெட்டிஸன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Tags :
× RELATED டபுள் ஐஸ்மார்ட் டீசர் வெளியானது