×

திரௌபதியாக தீபிகா

மகாபாரதம் கதையை படமாக்கும் முயற்சியில் சில பட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. மோகன்லால் நடிப்பில் மகாபாரதம் படத்தை தயாரிப்பதாக எழுத்தாளர் வாசுதேவன் நாயர் தெரிவித்தார். ஸ்ரீகுமார் மேனன் இந்த படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படம் அறிவிப்போடு நிற்கிறது. மகாபாரதத்தை படமாக்க ஆமிர்கானும் விருப்பம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் பாலிவுட்டில் 4 நிறுவனங்கள் இணைந்து மகாபாரதம் படமாக்க ஆலோசித்து வருகின்றன. இதில் திரௌபதி கேரக்டரில் நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தமாகியுள்ளார். மற்ற நட்சத்திரங்கள் யாரும் இன்னும் முடிவாகவில்லை. மகாபாரதம் படத்தில் திரௌபதி கேரக்டரில் நடிப்பதை தீபிகாவும் உறுதி செய்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பை ஆரம்பித்து 2021ல் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Tags : Deepika ,Draupadi ,
× RELATED காதல் உறவுகளை சொல்லும் உப்பு புளி காரம்