×

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை

சென்னை: போக்குவரத்துத்துறை தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்களின் வரவுக்கும், செலவிற்குமான வித்தியாசத்தொகையை வழங்க வேண்டும். ஊழியர்களின் பணம் ரூ.7,000 கோடியை உரிய வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும். ஓய்வுபெற்றவுடன் ஊழியர்களின் பணப்பலன்களை வழங்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய ஒப்பந்தம் தொழிலாள்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதிப்படுத்த வேண்டும். அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது. ஒருவழியாக இன்று 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தையானது நடக்கிறது. காலை 10.30 மணிக்கு எம்டிசியின், குரோம்பேட்டை பயிற்சி மையத்தின் வளாகத்தில் நடக்கும் இப்பேச்சுவார்த்தையில், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். மேலும் கோவிட்-19 காரணமாக அரசு அறிவுறுத்தலின்படி சமூகஇடைவெளியை பின்பற்ற வேண்டியிருக்கிறது. இதன்காரணமாக தொழிற்சங்கம்/பேரவையில் இருந்து ஒரு பிரதிநிதி மட்டும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பங்கேற்க திட்டமிட்டுள்ளோம் என்றார்….

The post போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,trade unions ,Tamil Nadu government ,unions ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...