×

பொது இடத்தில் லிப் டு லிப் கிஸ் கொடுத்து அசத்திய ஸ்ரேயா...

ரஜினிகாந்த், விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வந்தவர் ஸ்ரேயா. திடீரென்று அவரது வேகம் குறைந்தது. ஒரு கட்டத்தில் தமிழில் கைவசம் படங்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. அதற்கான காரண காரியங்களை ஆராய்ந்துக் கொண்டிருக்காமல் திருமணம் செய்துகொண்டு செட்டிலாக முடிவு செய்தார். ரஷ்யாவை சேர்ந்த கோடீஸ்வர மாப்பிள்ளை ஆண்ட்ரேய் கொஸ்சேவ் என்பவரை ரகசியமாக மணந்தார்.

திருமணத்துக்கு முன்பும், திருமணத்துக்கு பிறகும் சரி தனது கணவரை வெளிவுலகுக்கு காட்டாமல் மறைத்து வந்தார் ஸ்ரேயா. இதுபற்றி ஸ்ரேயாவிடம் கேட்டபோது, ‘தனிப்பட்ட எனது வாழ்க்கைபற்றி நான் யாருடனும் பேச விரும்பவில்லை’ என்றார். தற்போது நிலைமை மாறியிருக்கிறது. தனது கணவரை பார்ட்டிகளுக்கு அழைத்துச் சென்று மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் அளவுக்கு மனதை விசாலப் படுத்திக்கொண்டிருக்கிறார்.

தீபாவளியையொட்டி மும்பையில் நடந்த பார்ட்டி ஒன்றிற்கு கிக்கான உடை அணிந்து வந்த ஸ்ரேயா தன்னுடன் கணவரையும் அழைத்து வந்தார். இந்த ஜோடியை கண்டதும் புகைப்படக்காரர்கள் சூழ்ந்துகொண்டனர். ஆனால் எந்தவித ஒளிவும் மறைவும் இல்லாமல் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த ஸ்ரேயா, திடீரென்று கணவருக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்து அசத்தினார். பொது இடத்தில் இப்படியொரு அழுத்தமான கிஸ்ைஸ எதிர்பாராத கணவர் ஆண்ட்ரேய் ஆடாமல் அசையாமல் சிலைபோல் நின்றார்.

Tags :
× RELATED நிச்சயதார்த்தம் நடந்தது நிஜம்தான்