×

தமிழிலும் வருகிறது அர்னால்ட் படம்

அர்னால்ட் நடித்துள்ள டெர்மினேட்டர் டார்க் ஃபேட் படம், வரும் நவம்பர் 1ம் தேதி  உலகம் முழுவதும் வெளியாகிறது. இதன் 2 பாகங்களை ஜேம்ஸ் கேமரூன் இயக்கினார். அதன் தொடர்ச்சியாக வெளியாகும் இப்படத்தில், கதை உருவாக்குவதில் மட்டுமே அவர் ஈடுபட்டார். இந்தியாவில் ஃபாக்ஸ் ஸ்டுடியோஸ் வெளியிடும் இப்படத்தின் தமிழ் பதிப்பு டிரைலர் வெளியீட்டு விழாவில் ஆர்யா பேசியதாவது: பல  வருடங்களாக ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சிகள் செய்து வருகிறேன்.

ஜிம்முக்கு செல்லும் அனைவருக்கும் அர்னால்ட் பற்றி தெரியும். அவர் நடித்த டெர்மினேட்டர் ஆக்‌ஷன் படம் உலகம் முழுவதும் பிரபலம். நான் அர்னால்டின் தீவிர ரசிகன். அவர் மிகப் பெரிய நட்சத்திரமாக இருப்பதால் மட்டுமே பிரபலம்  ஆகவில்லை. இன்றுவரை அவர் பாதுகாத்து வரும் உடற்கட்டும் இன்னொரு காரணம். 7 முறை உலக அழகன் பட்டம் வாங்கியுள்ளார். இளைஞர்களுக்கு அர்னால்ட் பெரிய  இன்ஸ்பிரேஷன்.

Tags : Arnold ,
× RELATED பணக்காரர்கள் பட்டியல்- முதலிடத்தை இழந்தார் மஸ்க்