×

கைதி அவார்டு படமா?

நாளை திரைக்கு வரும் கைதி படம் குறித்து கார்த்தி கூறியது: இது அவார்டுக்காக எடுத்த படம் கிடையாது. ஆனா லவ் இல்லையா, காமெடி இல்லையா என கேட்பது இந்த படத்துக்கு பப்ளிசிட்டியாக மாறியது. இந்த படத்துக்கு அதெல்லாம் தேவைப்படவில்லை. அவ்வளவு தான். ஹாலிவுட்டில் வந்த ஸ்பீட், டைஹார்ட் மாதிரி படம் தான் இதுவும். அந்தப் படங்களின் அடிப்படையே ஆக்‌ஷன் தான்.

அந்த மாதிரி ஒரு படம் தான் இது. இதில் பலரதரப்பட்ட கேரக்டர்கள் இருக்கும். எல்லா கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருக்கும். கைதி கேரக்டருக்கு ஒரு குழந்தை இருக்கும். அவனுக்கு எமோஷனல் பக்கம் இருக்கும். அது எல்லாமே அழகாக வந்திருக்கிறது.

ஒரு ஆக்‌ஷன் படத்தில் இந்த விஷயங்கள் எல்லாம் இருக்கிறதை நான் முக்கியமாக பார்க்கிறேன். கைதியும் பிகிலும் தீபாவளிக்கு வெளியாகிறது. கைதிக்கு டீஸர் வந்ததிலிருந்தே ஒரு எதிர்பார்ப்பு உருவாகியிருக்கு. அதுவும் லோகேஷ், விஜய் சாரோட அடுத்த படம் இயக்க ஒப்பந்தமானதும் கைதி மேல் இன்னும் எதிர்பார்ப்பு கூடியிருக்கு. இதனால் எனக்கு மகிழ்ச்சி.

Tags :
× RELATED அஜித் படம் ரீ-ரிலீஸ்