×

இந்தியன் 2விற்காக காஜல் கற்கும் தற்காப்பு கலை

இந்தியன் முதல் பாகத்தில் சேதுபதி இந்தியன் தாத்தாவாக நடித்த கமல்ஹாசன் அப்படத்தின் கிளைமாக்ஸில் வெளிநாட்டுக்கு தப்பி செல்வதுபோல் காட்சி அமைக்கப்பட்ட நிலையில் இங்கு லஞ்ச ஊழல் மீண்டும் தலைவிரித்தாடுவதை அடுத்து வெளிநாட்டில் இருந்து திரும்பிவந்து லஞ்சம் வாங்குபவர்களை பழிவாங்குவது போல் இந்தியன் 2ல் கமலின் கதாபாத்திரம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதில் காஜல் அகர்வால் தற்காப்பு கலை கற்றிருப்பவராக நடிக்கிறார்.

இதற்காக அவர் தற்காப்பு கலைகள் கற்றுள்ளார். வழக்கமான தோற்றத்திலிருந்து காஜல் அகர்வால் இதில் மாறுபட்ட மேக்அப்பில் வருவார்என்று தெரிகிறது. இதுபற்றி அவர் கூறும்போது,’ இந்தியன் 2வில் தற்காப்பு கலை தெரிந்தவராக நடிக்கிறேன். அதில் என்னுடைய வயது, தோற்றம் பற்றி இப்போது எதுவும் கூறமுடியாது அடுத்த மாதம் தைவானில் படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறேன்’ என்றார்.

Tags : martial arts ,Indian ,
× RELATED இந்திய வீரர்கள் ஏன் கொல்லப்பட்டனர்?...