×

இரட்டையர் பிரிவில் வெரோனிகா – மெர்டன்ஸ் ஜோடி சாம்பியன்

டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடரின் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில்  நடப்பு சாம்பியனான செக் குடியரசு வீராங்கனைகள் பார்போரா கிரெஜ்சிகோவா – கேத்தரினா சினியகோவா இணையுடன்,  வெரொனிகா குதெர்மெதோவா (ரஷ்யா) – எலிஸ் மெர்டன்ஸ் (பெல்ஜியம்) இணை மோதியது. முதல் செட்டை வெரோனிகா இணை 6-2 என வசப்படுத்த,  செக் இணை 2வது செட்டை 6-4 என வென்று பதிலடி கொடுத்தது. இதையடுத்து 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் வெரோனிகா – மெர்டன்ஸ் ஜோடி 6-2, 4-6, 11-9 என்ற செட் கணக்கில் போராடி வென்று கோப்பையை முத்தமிட்டது….

The post இரட்டையர் பிரிவில் வெரோனிகா – மெர்டன்ஸ் ஜோடி சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Veronica ,Mertens ,W.W. ,Czech Republic ,Barpora Krejchikova ,A Finals ,Dinakaran ,
× RELATED மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை...