×

மீண்டும் சினிமாவுக்குள் வந்துவிட்டேன்; இயக்குனர் சரண் உருக்கம்

சரண் இயக்கியுள்ள படம், மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். ஆரவ், காவ்யா தாப்பர்,  நாசர், ராதிகா, ரோகிணி நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, கே.வி.குகன். இசை, சைமன் கே கிங். படம் குறித்து சரண் கூறியதாவது: இதில், அமர்க்களம் படத்துக்கு நேரெதிர் கேரக்டரில் ராதிகா நடித்துள்ளார். அவருக்கு ‘நடிகவேள் செல்வி’ என்ற பட்டம் வழங்கியதில் எங்கள் குழுவுக்கு அதிக மகிழ்ச்சி.

நான் இயக்கிய படங்களில் வழக்கமாக இடம்பெற்ற வைரமுத்து, பரத்வாஜ் கூட்டணி, இந்தப்  படத்தில் இல்லாத குறையை இசை அமைப்பாளர் சைமன் கே கிங் நிவர்த்தி செய்துள்ளார்.

வேற லெவல் என்று சொல்லக்கூடிய ஒளிப்பதிவை என் தம்பி  கே.வி.குகன் கொடுத்துள்ளார். ஆரவ் இரு வேறு சாயலில் நடித்துள்ளார். இனி   அவர் தமிழ் சினிமாவின் தாதாவாக மாறுவார். மார்க்கெட் ராஜா மூலம்  மீண்டும் சினிமாவுக்குள் வந்துவிட்டேன். வசூல்ராஜா எனக்கு தலை என்றால்,  மார்க்கெட்  ராஜா எனக்கு பாதம். இனி நான் வெற்றிநடை போடுவேன்.

Tags : Saran Urum ,
× RELATED அஜித் படம் ரீ-ரிலீஸ்