×

தமன்னாவுக்கு தொழிலதிபருடன் திருமணமா?

மும்பையை சேர்ந்த தொழிலதிபருடன் தமன்னாவுக்கு திருமணம் என தகவல் பரவியுள்ளது. விஷால் ஜோடியாக ஆக்‌ஷன் படத்தில் நடித்து வருகிறார். குயின் இந்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வருகிறார். சிரஞ்சீவியின் சைரா நரசிம்மா ரெட்டி படத்திலும் நடித்துள்ளார். மேலும் 2 படங்களில் நடிக்க அவர் கதை கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் திருமண செய்தி குறித்து கேட்டபோது, ‘நடிப்பிலிருந்து நான் ஒதுங்கிவிடவில்லை. ஆனால் சிலர் தேவையில்லாத வதந்திகளை கிளப்புகிறார்கள். திருமணம் செய்துகொள்ளும் மனநிலைக்கு நான் வரவில்லை. என்னை பற்றி வரும் திருமண செய்தி வெறும் வதந்திதான்’ என்றார் தமன்னா.

Tags : Tamanna ,businessman ,
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...