×

சூரரை போற்று படப்பிடிப்பு நிறைவு; தங்க நாணயம் பரிசளித்த சூர்யா

கே.வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'காப்பான்' திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடித்து வரும் 'சூரரை போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் சூர்யா ஜோடியாக அபர்ணா முரளி நடித்துள்ளார்.

மேலும், முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு நடித்திருக்கிறார். விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளது. இதனையடுத்து இந்தப் படத்தின் பின்னணி பணிகள் தொடங்க உள்ளது. இந்த படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் மற்றும் டெக்கினிசியன் அனைவருக்கும் சூர்யா தங்க நாணயம் பரிசாக வழங்கியுள்ளார்.

Tags : shooting ,Surya ,
× RELATED மசூதி மீது அம்பு விடுவது போன்ற சைகை...