×

தமிழக அரசில் 2748 கிராம உதவியாளர்கள்

பணி: கிராம உதவியாளர்.மொத்த இடங்கள்: 2748.சம்பளம்: ரூ.11,100-35,100.வயது: பொதுப் பிரிவினருக்கு 21 முதல் 32க்குள். பிற்பட்டோர்/மிகவும் பிற்பட்டோர்/முஸ்லிம்கள் 34 வயதிற்குள்ளும், எஸ்சி/ அருந்ததியர்/ எஸ்டி ஆகியோர் 37 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.தகுதி: குறைந்தபட்சம் 5ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். காலியிடங்கள் ஏற்பட்டுள்ள கிராமம் அல்லது தாலுகாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வில் கிராம நிர்வாகம் தொடர்பான கட்டுரை எழுத வேண்டும். நேர்முகத் தேர்வில் விண்ணப்பதாரர் கல்வித்தகுதி, இதர சான்றுகள் சரிபார்க்கப்படும்.www.tn.gov.in என்ற இணையதளத்தில் What’s New பகுதியில் இதற்கான ஆன்லைன் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 7.11.22.

The post தமிழக அரசில் 2748 கிராம உதவியாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,
× RELATED மதுரை எய்ம்சுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு