×

சென்னையில் முதன்முதலாக வரும் ஜனவரி மாதம் சர்வதேச புத்தக காட்சி: சனிக்கிழமைகளில் வகுப்புகள் உண்டு; அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசின் பொது நூலகத் துறையும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும், தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கமும் (பபாசி) இணைந்து சென்னையில் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் 16, 17 மற்றும் 18ம் தேதிகளில் முதல் முறையாக சர்வதேச புத்தக காட்சி நடத்த உள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் புத்தக் காட்சியின் இலச்சினையையும்(லோகோ), நிகழ்ச்சி நிரலையும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அப்போது பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் கஜலட்சுமி, பொது நூலக இயக்குனர் க.இளம்பகவத் ஆகியோர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது: சர்வதேச ஒலிம்பியாட் போட்டி எப்படி அறிவுசார்ந்த போட்டியாக இருந்ததோ, அதனைத் தொடர்ந்து தற்போது சர்வதேச புத்தக கண்காட்சி அறிவுசார்ந்த வாசிப்பை ஊக்கப்படுத்தும் நிகழ்வாக நடக்க இருக்கிறது. சிறந்த தமிழ் இலக்கியங்கள், தமிழ் படைப்புகள் உலகளவில் கொண்டு செல்லும் பணியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சர் உத்தரவின்பேரில் இந்தகாட்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பபாசி நடத்தும் புத்தக காட்சியில் இதற்கென்று சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள வாசிப்பாளர்களின் ஆர்வத்தின்படி, அதன் மூலம் எந்த இலக்கியம், படைப்புகளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது என்பதெல்லாம் உணர்ந்து, வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு அதற்கான வெளியீட்டு உரிமைகள் வழங்குவதற்கும், அதேபோல் வெளிநாட்டில் இருந்து வரும் படைப்புகளின் வெளியீட்டு உரிமைகளை பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகளவில் நம்முடைய தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் எடுத்துச்செல்லப்பட இருக்கிறது. வடகிழக்கு பருவமழைக்காக விடுமுறை விட்டாலும், ‘பாடத்திட்டத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே மழைக்  காலத்தில் விடப்படும் விடுமுறை நாட்களை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு, பாடத்திட்டங்களை முழுமையாக  முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.* 50 நாடுகளுக்கு அழைப்பு50 நாடுகளில் உள்ள பதிப்பாளர்கள், எழுத்தாளர்களுக்கு இதில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளோம். குறுகிய காலமாக இருப்பதால், 20 நாடுகளில் இருந்தாவது பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் வருவார்கள் என்று நம்புகிறோம். முதல் முறையாக நடத்த இருக்கிறோம். இனி வரும் ஆண்டுகளில் அதிக நாடுகளில் இருந்து பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் வருவார்கள்….

The post சென்னையில் முதன்முதலாக வரும் ஜனவரி மாதம் சர்வதேச புத்தக காட்சி: சனிக்கிழமைகளில் வகுப்புகள் உண்டு; அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister Mahesh ,Department of Public Library of the Government of Tamil Nadu ,Tamil Nadu Tentbook ,Academic Works Institute ,South Indian Book Publishers ,Minister ,Magesh ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்