×

சர்ச்சையில் சிக்காமல் நழுவிய லாவண்யா

அரசியல் என்ட்ரி ஆசை உள்ள சில ஹீரோ, ஹீரோயின்கள் தவிர மற்றவர்கள் பெரும்பாலும் சாதி தொடர்பான விஷயங்கள் பற்றி பேசி வம்பில் சிக்காமல் நழுவிவிடுவது வழக்கம். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டெல்லி விஐபி ஒருவர், ‘சமுதாயத்தில் உயர் வகுப்பினர் எப்போதும் மதிப்புமிக்க நிலையிலேயே இருப்பார்கள். அதற்கு காரணம் பரசுராமர் செய்த தியாகம்’ என்று பேசினார். இதை கேட்ட நடிகை லாவண்யா திரிபாதி பதிலடி தந்திருக்கிறார்.

‘நான் உயர்வகுப்பை சேர்ந்தவள்தான். ஆனால் இப்படியொரு அதிகார உணர்வு ஒரு சிலரிடம் இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நீங்கள் உயர்ந்தவரா, தாழ்ந்தவரா என்பது நீங்கள் செய்யும் காரியங்களை பொறுத்தே இருக்கிறது. எந்த வகுப்பை சேர்ந்தவர் என்பதால் அல்ல..’ என தனது இணைய தள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், என்ன நினைத்தாரோ அல்லது யாராவது அட்வைஸ் செய்தார்களோ இந்த டுவிட்டை பகிர்ந்த கொஞ்ச நேரத்தில் அதனை நீக்கிவிட்டார். ஆனாலும் நெட்டிஸன்கள் அவரது டுவிட்டை அதிவிரைவில் பார்த்து தங்களது கமென்டை பகிர்ந்தனர். லாவண்யா திரிபாதி தமிழில் பிரம்மன், மாயன் படங்களில் நடித்துள்ளார். பல்வேறு தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

Tags : Lavanya ,
× RELATED லாவண்யா ஜூவல்லரியின் ரூ.34.11 கோடி சொத்து அமலாக்கத்துறை முடக்கம்