×

ராஜராஜசோழன் பிறந்தநாள் அரசு விழாவாக அறிவித்த முதல்வருக்கு விவசாயிகள், தொழிலாளர் கட்சி நன்றி

சென்னை: மாமன்னன் ராஜராஜசோழன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்துள்ள முதல்வருக்கு விவசாயிகள், தொழிலாளர் கட்சி நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை: மாமன்னன் ராஜராஜ சோழன் தன் ஆட்சிக் காலத்தில் வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெருவுடையார் கோயிலை கட்டி உலகம் வியக்கும் வகையில் கலை நுட்பத்தை புகுத்தி, திராவிடக் கலைக்கு அச்சரமாக பெருமை சேர்த்தவர். இப்படி எண்ணற்ற அரிய திட்டங்கள் மூலம் மக்களுக்கான அரிய பணியாற்றி பெருமை பெற்றவர் ராஜராஜ சோழன். தெற்காசியா முழுவதும் வெற்றி கொடி நாட்டியவர். ரோம் வரை சென்று வியாபாரத்தை நிலை நாட்டியவர்கள்.உலகெங்கும் கிடைத்துள்ள நாணயங்களில் 80 விழுக்காடு நாணயங்கள் சோழர்கால நாணயங்கள் என்பதன் மூலம் சோழர் காலத்தில் வணிகம் உலகம் முழுவதும் நடந்தது உறுதி செய்யப்படுகிறது. இப்படி 1000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தலைசிறந்த ஆட்சியை வழங்கிய சத்திரிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற அரிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்  மு.க.ஸ்டாலினை பாராட்டி அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகத்தான அறிவிப்பு ஒட்டுமொத்த மக்களிடமும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post ராஜராஜசோழன் பிறந்தநாள் அரசு விழாவாக அறிவித்த முதல்வருக்கு விவசாயிகள், தொழிலாளர் கட்சி நன்றி appeared first on Dinakaran.

Tags : Farmers and Labor Party ,Chief Minister ,Rajarajacholan ,CHENNAI ,Mamannan Rajarajacholan ,Farmers, Labor Party ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...