×

கடலோர மாவட்டங்களில் 5 லட்சம் பனை விதைகள் விதைக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் அறிவுறுத்தல்

சென்னை: கடலோர மாவட்டங்களில் 5 லட்சம் பனை விதைகளை விதைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் அறிவுறுத்தினார். சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் துறையின் செயலாளர் சுப்ரியா சாகு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் ஜெயந்தி, இயக்குநர் தீபக் எஸ்.பில்ஜி மற்றும் சுற்றுச்சூழல் சிறப்பு செயலாளர் அர்ச்சனா கல்யாணி, வாரியத்தின் உறுப்பினர் கண்ணன், தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் அறிவுறுத்தியதாவது: மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசாரம் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் செயல்படுத்த வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படங்கள் தயார் செய்து ஊடகங்களில் வெளியிட வேண்டும். தேசிய அளவில் மீண்டும் மஞ்சப்பை பிளாஸ்டிக் விழிப்புணர்வு பிரசாரத்திற்கான ஸ்காச் விருதை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பெற்றதற்கு பாராட்டுகள். கோயம்பேடு சந்தை வளாகத்தை கரிம மாசு இல்லாத வளாகமாக உருவாக்க வேண்டிய முயற்சிகளை விரைந்து முடிக்க வேண்டும். மருத்துவக் கழிவு மேலாண்மை வாகனம் மற்றும் கழிவுநீர் கொண்டு செல்லும் வாகனத்தின் செயல்பாடுகளை புவிசார் நிலை கண்காணிப்பு கருவி பொருத்தி கண்காணிக்க வேண்டும். கழிவுநீரை சட்டவிரோதமாக நீர்நிலைகளில் வெளியேற்றிய வாகனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதை செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும். 5 லட்சம் பனை விதைகள் கடலோர மாவட்டங்களில் விதைக்கப்பட வேண்டும். 2023-24ம் ஆண்டிற்கான முக்கிய அறிவிப்புகளை உடனடியாக தயாரித்து ஒப்புதல் பெற வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்….

The post கடலோர மாவட்டங்களில் 5 லட்சம் பனை விதைகள் விதைக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Minister Maianathan ,Chennai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...