×

ஜிஎஸ்டி 5 சதவீதம் உயர்வு செங்கல் உற்பத்தியாளர்கள் டெல்லியில் போராட்டம்

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் செங்கல் சூளை உற்பத்தியாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமான பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியானது 5 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால் செங்கல் உற்பத்தியாளர்களுக்கு ஒரு சதவீதமாக இருந்து வந்த சரக்கு மற்றும் சேவை வரியானது இந்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 6 சதவீதமாக அதிகரித்தது. இதற்கு செங்கல் உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உயர்த்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்று செங்கல் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தலைநகர் டெல்லியில் திரண்ட செங்கல் உற்பத்தியாளர்கள், உயர்த்தப்பட்ட 5 சதவீத ஜிஎஸ்டியை அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் ஏற்கனவே இருந்தது போல ஒரு சதவீதமாக நிர்ணயிக்க வேண்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்….

The post ஜிஎஸ்டி 5 சதவீதம் உயர்வு செங்கல் உற்பத்தியாளர்கள் டெல்லியில் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,New Delhi ,Dinakaran ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி