×

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகேயுள்ள காஞ்சி காலனி பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் கடந்த 26ம் தேதி தனது வீட்டின் பின்புறத்தில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது அதனை வாலிபர் ஒருவர் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் சத்தம் போட்டபோது அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து அந்த பெண் தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தபோது, அந்த வாலிபர் பொட்டியபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (30) என்பது தெரிந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Kanchi Colony ,Kadaiyambatti ,
× RELATED தேர்தலில் அதிமுக பின்னடைவு எடப்பாடி...