×

தெலங்கானாவில் நாளை இடைத்தேர்தல் இறுதிகட்ட பிரசாரத்தில் பாஜ- டிஆர்எஸ் மோதல்: எம்எல்ஏ.க்களின் கார்கள் உடைப்பு; போலீஸ் தடியடி

திருமலை: தெலங்கானாவில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று இறுதி நாள் பிரசாரத்தில் பாஜ – டிஆர்எஸ் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில், எம்எல்ஏக்களின் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தெலங்கானா மாநிலம், முனுகோடு சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ கோமட்டி ரெட்டி ராஜ்கோபாலரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்து, அக்கட்சியில் இருந்து விலகி பாஜ.வில் இணைந்தார். இதனால், அந்த தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஆளும் டிஆர்எஸ் சார்பில் குசுகுந்த்லா பிரபாகர் ரெட்டியும், பாஜ சார்பில் கோமட்டிரெட்டி ராஜ்கோபாலரெட்டியும், காங்கிரஸ் வேட்பாளர் பால்வி ஸ்ரவந்தியும் போட்டியிடுகின்றனர். டிஆர்எஸ், பாஜ இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது, பாஜ வேட்பாளர் ராஜகோபாலை ஆதரித்து எம்எல்ஏ ஈடலா ராஜேந்திரா இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். அதே பகுதியில் டிஆர்எஸ் கட்சியினரும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கற்கள், கட்டைகளால் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில், பாஜ பிரசார வாகனம், எம்எல்ஏக்கள் சுதர்சன்ரெட்டி, ஈடலா ராஜேந்திராவின் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இருதரப்பிலும் பலர் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி இரு தரப்பினரையும் கலைத்தனர். மோதல் காரணமாக தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த மோதலால், தெலங்கானாவில் பதற்றம் நிலவுகிறது.* பாஜ.விடம் பணத்த வாங்குங்க டிஆர்எஸ்.க்கு ஓட்டு போடுங்கடிஆர்எஸ் வேட்பாளர் குசுகுந்த்லா பிரபாகர் ரெட்டியை ஆதரித்து நாராயணபூரில் இக்கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமாராவ் பிரசாரம் செய்தபோது, ‘கோமட்டிரெட்டி மோடியின் காலை பிடித்து கொண்டு ரூ.1,800 கோடிக்கு ஒன்றிய அரசிடம் இருந்து ஒப்பந்தங்கள் பெற்றதால்தான், அக்கட்சியில் இணைந்தார். எனவே, தேர்தலில் வெற்றி பெற பாஜ ஒரு கிலோ தங்கம், பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், டிஆர்எஸ்.சுக்கு வாக்களியுங்கள்,’ என பேசினார்.* ஒரு ஓட்டுக்கு பாஜ ரூ.30,000பாஜ வேட்பாளர் கோமட்டிரெட்டிக்கு சொந்தமான நிறுவனத்தில் இருந்து முனுகோடு தொகுதிக்கு உட்பட பாஜ நிர்வாகிகள் வங்கி கணக்கில் ரூ.5.30 கோடி செலுத்தப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் டிஆர்எஸ் கட்சி புகார்  அளித்துள்ளது. அது பற்றி விளக்கம் கேட்டு கோமட்டிரெட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்  அனுப்பி உள்ளது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு பாஜ சார்பில் ஒரு ஓட்டுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்படுவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது….

The post தெலங்கானாவில் நாளை இடைத்தேர்தல் இறுதிகட்ட பிரசாரத்தில் பாஜ- டிஆர்எஸ் மோதல்: எம்எல்ஏ.க்களின் கார்கள் உடைப்பு; போலீஸ் தடியடி appeared first on Dinakaran.

Tags : BJP ,TRS ,Telangana ,Tirumala ,
× RELATED மசூதி மீது அம்பு விடுவது போன்ற சைகை...