×

ஒரே நேரத்தில் 2 வாலிபர்களுடன் பழக்கம் கர்ப்பிணியை கொன்ற சென்னை ஓட்டல் ஊழியர்: கணவரை பிரிந்து வராததால் ஆத்திரம்

பவானி: ஈரோடு மாவட்டம் சித்தோடு நசியனூர் ராயபாளையம் ரோடு நெசவாளர் காலனியை சேர்ந்த சென்னியப்பன், வளர்மதி தம்பதியின் 2வது மகள் பிருந்தா (23). பிகாம் பட்டதாரி. இவரும் ஈரோடு வெட்டுக்காட்டு வலசை சேர்ந்த முருகனின் மகன் கார்த்தி (24) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பையும் மீறி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பிருந்தாவின் பெற்றோர் அவர்களை ஏற்றுக்கொண்டனர். அவர்களது வீட்டிலேயே வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 24ம் தேதி பிருந்தாவின் பெற்றோர் தீபாவளிக்கு  முதல் மகள் மங்கையர்கரசி வீட்டுக்கு சென்றுவிட்டனர். 28ம் தேதி வெகுநேரமாகியும் பிருந்தாவின் நடமாட்டம் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த ஜெயந்தி என்பவர் பார்த்தார். அப்போது பிருந்தா இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சித்தோடு போலீசுக்கும், பிருந்தாவின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிருந்தாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.   இந்நிலையில் பிருந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சந்தேக மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையில், பிருந்தாவை அவரது முன்னாள் காதலனான திண்டுக்கல் மாவட்டம் நந்தம் பகுதியை சேர்ந்த அரவிந்த் (22) கொலை செய்திருப்பது தெரியவந்தது. ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்து வந்த அரவிந்த் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கடி பிருந்தா வசிக்கும் நெசவாளர் காலனியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து செல்வார். இதன்மூலம் அரவிந்த்துக்கும், பிருந்தாவுக்கும்  காதல் உருவானது. ஒரே நேரத்தில் கார்த்தி, அரவிந்தை பிருந்தா காதலித்துள்ளார். இதற்கிடையே சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் அரவிந்த் வேலைக்கு சேர்ந்தார்.இந்த நிலையில் கார்த்தியை பிருந்தா திருமணம் செய்து கொண்டனர். இருந்தாலும் அரவிந்துடன் தொடர்பில் இருந்தார். கடந்த 27ம் தேதி பிருந்தா வீட்டுக்கு அரவிந்த் வந்தார். இருவரும் உல்லாசமாக இருந்தனர். அதன்பின்னர் பிருந்தாவின் கணவரின் செல்போன் அழைப்பு வந்தது. அதனையடுத்து ஒரு மணி நேரம் பேசினார். பின்னர் ‘நாம் இருவரும் ஊரைவிட்டு ஓடிவிடலாம் வா’ என்று அரவிந்த் அழைத்தார். அப்போது ‘நான் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதால் வரமுடியாது’ என்று பிருந்தா கூறினார். இதனையடுத்து ‘நாம் தற்கொலை செய்து கொள்ளலாமா?’ என்று அரவிந்த் கேட்டுள்ளார். ‘நான் தற்கொலை செய்ய முடியாது. வேண்டுமானால் என்னை கொலை செய்துவிட்டு நீங்கள் தற்கொலை செய்து கொள்ளுங்கள்’ என்று பிருந்தா கூறியுள்ளார். தான் அழைத்தும் கணவரை பிரிந்து வராத ஆத்திரத்தில் இருந்த அரவிந்த் காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். போலீசார் சென்னைக்கு சென்று அரவிந்தை கைது செய்தனர்….

The post ஒரே நேரத்தில் 2 வாலிபர்களுடன் பழக்கம் கர்ப்பிணியை கொன்ற சென்னை ஓட்டல் ஊழியர்: கணவரை பிரிந்து வராததால் ஆத்திரம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bhawani ,Chenniyappan ,Weaver's Colony ,Chithod Nasianur Rayapalayam Road, Erode District ,Varamathi ,
× RELATED தொடர் மழை காரணமாக அப்பர் பவானி அணை நீர்மட்டம் 130 அடியாக உயர்வு!!