×

2 நாள் பயணமாக சீனா சென்றார், பாக். பிரதமர் ஜின்பிங்குடன் முக்கிய பேச்சு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சீனாவுக்கு நேற்று சென்றார். அதிபர் ஜின்பிங்குடன் அவர் ஒப்பந்தங்களை செய்கிறார்.அமெரிக்கா உடனான நெருங்கிய நட்பை இழந்த பிறகு, சீனாவுடன் பாகிஸ்தான் நட்பு வைத்துள்ளது. இதை வலுத்தப்படுத்த தனது நாட்டுக்கு பயணம் வரும்படி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு சீனா அழைப்பு விடுத்தது. இதை ஏற்று நேற்று அவர் 2 நாள் பயணமாக சீனா சென்றார். அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தி, பல்வேறு புதிய ஒப்பந்தங்களை செய்ய உள்ளார். குறிப்பாக, சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ரூ.82 ஆயிரம் கோடியில் சாலை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார். மேலும், வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள  கஷ்கருடன் அரபிக்கடலில் உள்ள பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை இணைப்பது குறித்த அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையும் நடத்தப்பட உள்ளது. ஜின்பிங் 3வது முறையாக அதிபரான பின் முதல் வெளிநாட்டு சந்திப்பாகும். …

The post 2 நாள் பயணமாக சீனா சென்றார், பாக். பிரதமர் ஜின்பிங்குடன் முக்கிய பேச்சு appeared first on Dinakaran.

Tags : China ,Pak ,Xi Jinping ,Islamabad ,Pakistan ,Shahbaz Sharif ,President Xi Jinping ,America ,Dinakaran ,
× RELATED புடின்-ஜீ ஜின்பிங் சந்திப்பு: ரஷ்ய- சீன உறவை வலுப்படுத்த திட்டம்