×

அசைவ உணவு உண்பதற்கு எதிர்ப்பு: ‘மனித இறைச்சி’ பேக்கிங் போல் அரை நிர்வாண ேபாராட்டம்; ‘பீட்டா’ அமைப்பினர் நூதன பிரசாரம்

லண்டன்: அசைவ உணவு உண்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித இறைச்சி பேக்கிங் போன்று தரையில் படுத்து பீட்டா அமைப்பினர் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர். உலக சைவ உணவு தினத்தை முன்னிட்டு லண்டனின் பிக்காடில்லி பகுதியில் ‘பீட்டா’ அமைப்பினர் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். அதாவது, ‘மனித இறைச்சி’ ஸ்லாப்கள் (பேக்கிங் இறைச்சி) போன்று அரை நிர்வாணமாக அடைக்கப்பட்ட நிலையில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் பார்வையாளர்களின் கண்ணைக் கவரும் வகையில் இருந்தது. அசைவ உணவு உண்பவர்கள், அந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், அந்த பேக்கிங்கின் மேல் ‘கார்பன் நியூட்ரல்’ மற்றும் ‘ஃப்ரீ-ரேஞ்ச்’ உள்ளிட்ட லேபிள்கள் ஒட்டப்பட்டிருந்தன. ரத்தம் தோய்ந்த பேக்கிங்கில் தரையில் படுத்தவாறு போராட்டம் நடத்தப்பட்டதால், அவ்வழியாக சென்ற வழிப்போக்கர்கள் நூதன ஆர்ப்பாட்டத்தை பார்த்து ஆச்சரியமடைந்தனர். இதுகுறித்து பீட்டா அமைப்பின் மூத்த பிரச்சார மேலாளர் கேட் வெர்னர் கூறுகையில்: இறைச்சி உணவை உண்ணும் எவரும், மற்றொரு மனிதனையும் சாப்பிட முடியும் என்பதை காட்டும் வகையில், நூதன முறையில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மக்கள் இறைச்சி உணவை உண்பதை தவிர்த்து, சைவ உணவிற்கு மாற வேண்டும் என்றார்….

The post அசைவ உணவு உண்பதற்கு எதிர்ப்பு: ‘மனித இறைச்சி’ பேக்கிங் போல் அரை நிர்வாண ேபாராட்டம்; ‘பீட்டா’ அமைப்பினர் நூதன பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Beta ,London ,Dinakaran ,
× RELATED லண்டனில் நடக்கும் நிகழ்ச்சிக்கு...