×

கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் ஆகாச தீபம் ஏற்றி வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீகாளஹஸ்தி: கார்த்திகை மாத வெள்ளிக்கிழமையொட்டி, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ஆகாச தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நேற்று திருப்பதி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் ஆகாச தீபம் ஏற்றப்பட்டது. கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு தாரக சீனிவாசலு மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு ஆகியோர் தீபத்தை ஏற்றினர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஊஞ்சல் மண்டபம் அருகில் ஆகாச தீபத்தை தரிசித்து வழிபட்டனர்.பின்னர், அஞ்சுரு தாரக சீனிவாசலு கூறுகையில், ‘கார்த்திகை மாதம் (தெலுங்கு) 3ம் நாள் வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். அதற்காக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்குள் கார்த்திகை தீபங்களை ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே  கோயிலின் 3ம் கோபுரம் அருகில் உள்ள நாகாலம்மன் புற்று அருகில் தீபங்களை ஏற்ற வேண்டும். பிக்ஷால காலிகோபுரம் கோயில் நுழைவாயில் மற்றும் 2வது கோபுரம் முன்பு பக்தர்கள் தீபங்களை ஏற்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாளை (இன்று) சனிக்கிழமை நாக சதுர்த்தியையொட்டி கோயிலில் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது,’ என தெரிவித்தார்….

The post கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் ஆகாச தீபம் ஏற்றி வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Akasha ,Srikalahasti Temple ,Karthikai ,Srikalahasti ,Akasa ,Srikalahasti Shiva Temple ,
× RELATED கார்த்திகை தீப திருவிழா அனைத்து...